සිංහල, Colombo, Democracy, Jaffna, Peace and reconciliation

பிரபாகரனுக்கு எத்தனை பிறவி?

ஜனவரி மாதம் 23ஆம் திகதி முற்பகல் 11.15 மணியளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிடமான இரணைமடு‚ கல்மடுக்குளம் பகுதியில் உள்ள ‘எக்ஸ்-ரே’ தளம் மீது இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியுள்ளன என்று விமானப் படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார். உளவுத் தகவல்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி தென்னிலங்கை பக்கம் கசிந்ததும் இனவாதிகளுக்கு பெரும் கொண்டாட்டம். யுத்த ஆதரவாளர்களுக்கு சந்தோஷம். பட்டாசுகள்‚ பாற்சோறு என தென்னிலங்கையே குதூகலம். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றே உறுதிசெய்துவிட்டனர்.

தென்னிலங்கையின் கொலன்னாவைப் பகுதியில் பாற்சோறு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டதாக அறியமுடிகிறது. இதேபோலத்தான் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதும் தென்னிலங்கை கொண்டாடியது. தற்போது அதன் தலைவரின் மரணம்?

பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து கொழும்பு‚ கிரிபத்கொட பகுதியில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சந்தைக்குச் சென்ற இருவர் மறக்கரிகளை வாங்கிவிட்டு அரசியல்‚ இராணுவ வெற்றிகளைப் பற்றி பேச ஆரம்பித்தனராம். அப்போது அதில் ஒருவர்‚ “மச்சான் லேட்டஸ்ட் நிவ்ஸ். பிரபாகரனை நமது இராணுவத்தினர் விமானக் குண்டுவீச்சு நடத்தி கொன்றுவிட்டனராம்” என்று கூறியுள்ளான். அதற்கு மற்றைய நபர்‚ அப்படியர என்ற புண்முறுவல் முகத்தோடு‚ மறக்கரி வாங்கி மீதியாக இருந்த 100 ரூபர நோட்டை கொடுத்து “பட்டாசு வாங்கிக்கொண்டு வா” என்று கூறி அனுப்பியுள்ளான். தற்போதுள்ள வாழ்க்கைச் செலவின் படி பொருட்கள் வாங்கி 100 ரூபர மீதியாவதே பெரிய விடயம். அதையும் இவர் எதற்காகப் பயன்படுத்துகிறார் என்று பார்த்தீர்களா! எவ்வளவு தூரம் இவர்களைப் பிரபாகரன் பாதித்துள்ளார். பிரபாகரன் மீதுள்ள வெறுப்பையே இவர்கள் தமிழர்கள் மீதும் காட்டக்கூடும். இனவாதம் வேறூன்றிவிட்டது.

பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என அரச படை தெரிவிக்கும் நிலையில் இராணுவத்தினரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பிரபாகரனுக்கு எத்தனைப் பிறவி? ஏனென்றால்‚ பிரபாகரன் இறந்துவிட்டார் என பலமுறைகள் இலங்கை இராணுவத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது‚ தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது 1989 ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரும் பிரதி பாதுகாப்பு அமைச்சருமாக இருந்த ரன்ஜன் விஜேரத்ன‚ “இராணுவத்தினரின் தாக்குதலால் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். தற்போது புலிகள் இயக்கத்தின் தலைவராக இருப்பவர் பிரபாகரனைப் போன்ற போலியான ஒருவர். உலகில் ஒருவரைப் போன்று 7 பேர் இருக்கின்றமை உங்களுக்குத் தெரியும்தானே?” என்று தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டார் என புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டது. மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டி ஒன்று வடக்குக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அது பிரபாகரனுக்குத்தான் எனவும் இலங்கை அரசால் வதந்திகள் பரப்பப்பட்டன. பிரபாகரன் இவ்வாறு பல தடவைகள் கொலைசெய்யப்பட்டிருந்தால் தற்போது தலைமைப் பீடத்தில் இருப்பவர் யார். இது அவருடைய எத்தனையாவது பிறவி?

அரசின் இந்தப் பரப்புரை இனவாதிகளை தம்பக்கம் திருப்பிக்கொள்ளவே.
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற இலங்கை அரசின் செய்திக்கு விடுதலைப் புலிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் முதன்மை முகாம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது என்ற பெரும் பரப்புரையை அரசு முன்னெடுத்துள்ளது என்றும்‚ இதன் மூலம் மக்களைக் குழப்பும் நோக்கமே அரசுக்கு உள்ளது என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையர இளந்திரையன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமை கொல்லப்பட்டதாக இதற்கு முன்னமும் இலங்கை அரசால் கூறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இளந்திரையன் வழங்கிய செவ்வியில்‚ போலியாக உருவாக்கப்பட்டிருந்த முகாம் ஒன்றின் மீதே விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். முதலாம்‚ இரண்டாம் உலக யுத்தங்களில் பல நாடுகள் ஆயுத முகாம்கள்‚ இராணுவத்தினர் தங்கும் முகாம்கள் ஆகியன போலியாக அமைத்து எதிரி நாடுகளை ஏமாற்றி வந்துள்ளன. விமானத் தாக்குதல் நடத்தினால் எதிரிகளுக்குத்தான் நட்டம். இவ்வாறான போலியானவை தயாரிக்கவென தனியார் நிறுவனங்களும் அந்தக் காலப்பகுதியில் இருந்துள்ளன. இதுபோன்ற ஒரு உத்தியையே விடுதலைப் புலிகளும் கையாண்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எது என்னவாக இருந்தாலும் யுத்தம் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசு சிங்கள மக்களை தம் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக இனவாதத்தை விதைக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒத்தாசையாக ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றது. இந்தப் பிரச்சினை எப்போதுதான் தீருமோ? சர்வதேசம் என்ன செய்யப்போகிறது?

ளு.சுயதயளநபயச