தேயிலையை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டங்களை பரவலாகக் கொண்டது பதுளை மாவட்டம். குறிப்பாக பதுளை‚ பசறை‚ லுனுகல‚ ஹாலிஎல‚ பண்டாரவளை‚ அப்புத்தளை‚ வெளிமடை‚ ஹல்தமுல்லை‚ ஊவர பரணகம ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுக் குட்பட்ட பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்கள் செறிவாகக் காணப்படுகின்றன.
அபிவிருத்தி பாதையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் தோட்டபுறங்களில் நிறைவேற்றப்படாத தேவைகள் ஏராளம் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. போ‘ாக்கு‚ சுகாதாரம்‚ தொழில்வாய்ப்பு‚ சமூக அந்தஸ்து‚ கல்வி மற்றும் பொருளாதாரம் போன்றவற்றுடன் உட்கட்டமைப்பு வசதிகளிலும் பெரியதொரு மந்த நிலை காணப்படுகிறது. மேற்கூறிய தேவைகளில் காணப்படும் வெற்றிடம் பெரும்பாலும் தோட்டதொழிலாளர்களுக்கே சவாலாக அமைகிறது. அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத பொருளாதாரத்தைக் கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏனையத் தேவைகள் எட்டாத கனியாக இருக்குமென்பதை யாரும் ஊகித்துக் கொள்ளலாம்.
எல்லர வகையிலும் பூர்த்தி செய்யப்படாத தேவைகளைக் கொண்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் வாழும் சூழலை நேரில் அவதானித்தால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். நகரங்களை அண்டிய பிரதேசங்களை விட‚ நகருக்குத் தொலைவில் அமைந்துள்ள பகுதிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை பின்வரும் ஆய்åலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
பதுளை நகரிலிருந்து 61மஅ தொலைவிலும்‚ பசறையிலுருந்து 43மஅ தொலைவிலும்‚ பிபிலையிலிருந்து 40மஅ தொலைவிலும் அமைந்துள்ள தெகிகலை எனும் தோட்டப்பகுதின் உண்மை நிலவரம் இங்கு விவரிக்கப்படுகிறது.
பெருந்தோட்டக் கம்பனியான மடுல்சீமை பிளான்டே‘ன் லிமிட்டட்டின் கீழ் இயங்குகிறது றோபேரி தோட்டம். பசறை பிரதேச சபையின் அதிகாரத்துக்குள் வரும் இத்தோட்டம் பசறையிலிருந்து சுமார் 43முஅ தொலைவில் அமைந்துள்ளது. றோபேரி தோட்டத்தின் ஒரு பகுதியான தெகிகலை பிரிவு பிபிலை பிரதேச சபையின் அதிகாரத்துக்குள் வருகிறது. கரகாவல கிராம அதிகாரி பிரிவுக்குள் வரும் தெகிகலை பிரிவு மிகவும் சரிவான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. றோபேரி தோட்ட மலையுச்சியிலிருந்து செங்குத்தாகச் சரிந்துள்ள பகுதியில் அமைந்துள்ள தெகிகலை மக்களின் வெளியுலகத் தொடர்பு மட்டுபடுத்தப்பட்டதாகவே உள்ளது.
கல்வி வசதி
தரம் 7 வரை வகுப்புகளைக் கொண்ட தமிழ் பாடசாலையில் தற்போது 52 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். அதிபர் உட்பட 5 ஆசிரியர்களைக் கொண்ட இப்பாடசாலையில் பயிற்றப்பட்ட கனி‘்டபிரிவு ஆசிரியர்கள் இன்மையானது பெரும் குறைபாடாக உள்ளது. அண்மையில் வழங்கப்பட்ட மலையக ஆசிரிய நியமனங்கள் மூலமாக மூன்று ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று கட்டிடங்களைக் கொண்ட இப்பாடசாலையில் தளபாட வசதிகள் குறைவாகவே உள்ளன. வாசிகசாலை வசதி‚ விஞ்ஞான ஆய்வுகூட வசதி குறைவாக உள்ள இப்பாடசாலைக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதியின்மை ஆசிரியர்களுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறது. போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில ஆசிரியர்கள் இப்பகுதியிலேயே தங்கியிருந்து சேவை புரிகின்றனர்.
தரம் 7 வரை பயின்ற மாணவர்கள் மேல் வகுப்புக்களுக்குச் செல்ல தூரப் பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. பாதை சீரின்மை‚ போதுமான பஸ் சேவை இல்லாமை காரணமாக அனேக மாணவர் தொடர்ந்து வெளிப்பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
சுகாதார வசதி
இங்கு மக்கள் வாழும் சுற்றாடல் மிகவும் மோசமானதாகவே உள்ளது. பராமரிப்பு குறைவாக உள்ள சூழலில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கும் கால்நடைகளும் திரிவதால் மக்களின் சுகாதாரம் கேள்விக்குரியதாகவே உள்ளது. சிறுவர்கள் மட்டுமன்றி பெரியோர்களும் சரியான சுகாதார பழக்கவழக்கங்களை பின்னற்றாத நிலையே இங்கு காணப்படுகிறது.
அடிப்படை வசதிகளுடன் கூடிய வைத்திய சாலை இப்பிரிவிலிருந்து தொலைவில் அமைந்துள்ள றோபேரியில் அமைந்துள்ளது. அவசர நிலைமைகளின் போது வைத்தியசாலைக்குச் செல்ல வாகன வசதி பெற தோட்ட நிர்வாகத்தையே நாடவேண்டியிருப்பதால் பல்வேறு அசெகரியங்களை இவர்கள் எதிர்நோக்குகின்றனர். பாதை மிகவும் மோசமாக காணப்படுவதால் விரைவாக வைத்திய சாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
வீட்டு வசதி‚ குடிநீர்‚ மின்சார வசதி
எல்லர தோட்டங்களையும் போல் இங்கும் மக்கள் சாதாரண லயங்களிலேயே வசிக்கின்றனர். போதியளவு வசதியற்ற இவ்வீடுகளில் மக்கள் சிரமத்துக்கு மத்தியில் வாழ்கின்றனர். மக்களுக்கான மின்சார வசதி இல்லாத நிலையில் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு மட்டும் மின்சார வசதி உள்ளது. மின்சார கம்பிகள் பாதுகாப்பற்ற விதத்திலேயே பொருத்தப்பட்டுள்ளன. தோட்ட நிாவாகம் செய்து கொடுத்துள்ள குடிநீர் வசதி இங்குள்ள பாடசாலைக்கும் கிடைக்கிறது.
மது பாவனை
சட்ட விரோத மது பாவனை இங்கு அதிகமாக காணப்படுவதாக பலர் குறிப்பிட்டனர்.
அரசாங்க உதவிகள்
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய‚ வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் இங்கே சமுர்த்தி உட்பட அரச மானியங்கள் கிடைப்பதில்லை என பலர் குறிப்பிட்டனர்.
பொருளாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகள்.
தேயிலைத் தோட்டத் தொழிலையே நம்பி வாழும் இம்மக்கள் வருமானமீட்டித் தரும் வேறு முயற்சிகளில் ஈடுபடத் தடையாக அமைவது சீரற்ற போக்குவரத்து வசதியாகும்.
கால்நடைகளை வளர்த்து பாலுற்பத்தியில் ஈடுபட்டாலேர அல்லது மரக்கறி செய்கையில் ஈடுபட்டாலோ‚ இதன் மூலமான விளைச்சலை சந்தைபடுத்த முடியாத நிலை காரணமாக‚ இவற்றில் ஈடுபடுவதும் இவர்களுக்கு சிக்கலாகவே உள்ளது. எனினும் தமது வீட்டுத் தேவைக்காக இவ்வாரான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். மாடுகள் வளர்க்கும் சிலர்‚ பாலினை விற்பதற்கான வசதிகள் இல்லாததால் பால் கரப்பதனை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இவற்றுக்கு முக்கிய காரணமாக அமைவது போக்குவரத்து பிரச்சினையாகும்.
இங்கு வேறு தொழில் வாய்ப்புகளும் இல்லாததால் அனேக இளைஞர்கள் வெளிப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகின்றனர்.
போக்குவரத்து வசதி
இம்மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவது போக்குவரத்து வசதியின்மையாகும். சீரற்ற பாதை மற்றம் போதிய பஸ் சேவை இல்லாமையால் இப்பகுதிக்குச் செல்வதும‚் அங்கிருந்து வெளியிடங்களுக் பயணிப்பதும் சவாலாகவே உள்ளது. குழிகளை கொண்ட பாதையில் நடந்து செல்வதே சிரமாக இருப்பதால் வாகனங்களின் போக்குவரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பி இம்மக்கள் தமது பிரயாணங்களைத் தீர்மாணிக்கின்றனர். ஒரு பஸ்ஸை தவர விட்டால் அன்றைய பயணமே ரத்தாகிவிடும் நிலை இம்மக்களுக்கு.
இலாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு செயல்படும் பெருந்தோட்ட கம்பனியும் இப்பாதையை சீர்செய் முன்வராமை மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசும்‚ அமைச்சர்களும் இவ்விடயத்தில் பாராமுகமாகவே செயல்படுகின்றன.
இம்மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அரசியல் வாதிகளும் ‚ இம்மக்களுக்காக பாடுபடவேண்டிய தொழிற்சங்கங்களும்‚ மக்களின் உழைப்பினால் இலாபமீட்டும் கம்பனியும் இம்மக்களின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்ய முன்வராமை எந்தளவில் மனிதாபிமானது என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.
தெகிகலை பிரிவைப் போல் இன்னும் ஏராளமாக பகுதிகள் மலையகத்தில் காணப்படுகின்றன. தமது உழைப்பின் இலாபத்தை மற்றவற்கள் அனுபவிக்க தோட்டத்தொழிலாளர்கள் ஓட்டை வீடுகளுக்குள் உறங்கும் பரிதாபம் இன்னும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இவர்களது தலைவிதியையே கம்பனிகளும்‚ அரசியல்வாதிகளும்‚ தொழிற்சங்களும் தான் தீர்மானிக்கின்றன என்பது கவலைக்குறிய உண்மையாகும். இவற்றுக்கெள்ளாம் தீர்வு வேண்டின்‚ மக்கள் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட நிலையே இங்கு காணப்படுகிறது.
ஏனைய சமூகத்தினரைப் போல் பெருந்தோட்ட தொழிலாளர்களும் முன்னேற வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட அணைவரும் இதய சுத்தியுடன் செயலாற்ற வேண்டும். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் தமது முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்து அசையாத உறுதியுடன் உழைக்க வேண்டும்‚ அடுத்தவரில் தங்கியிருக்காது சமூகத்தில் சிறப்பாக வாழ மக்களிடையே சுய சிந்தனை வளர்ச்சியும் ஏற்படுவது முக்கியமானதாகும்.