கடந்த வாரம் இந்தியாவுக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ‚ திருப்பதி கோயிலில் வளிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாள் உடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தான் விடுதலைப் புலிகளுடன் இன்று கூட பேசுவதற்கு தயார் ஆனால் பயங்கரவாதிகள் முதலில் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும்‚ ஏனெனில் எப்போதேல்லாம் அவர்கள் பலயீனமாக இருக்கிறார்கலேர அப்போதெல்லாம் அவர்கள் பேச்சுக்கு தயாராக இருக்கிறார்கள் எனறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்‚ நாம் அணைவரும் இலங்கையர்கள். நாம் அணைவரும் சகோதரர்கள். வடக்கு‚ கிழக்கு அல்லது தெற்கு எங்கிருந்தாலும் நிச்சயமாக‚ நமக்கிடையில் பேச்சுவார்தைகளை மேற்கொள்வதன் மூலம் நாம் தீர்வு காணலாம் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த வாரத்திற்கு முதல் வாரம்‚ ஸ்ரீ லங்கர சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி மற்றும் விவசாய சேவைகள் அமைச்சர் மைத்ரியால சிறிசேன‚ செய்தியாளர் மாகாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்‚ அரசாங்கம் தேசிய பிரச்சினை திர்வுக்கும் சமாதான பேச்சுவார்த்தைக்கும் எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய வேண்டும். ஓற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குறிப்பிட்டார்.
2006ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில்‚ பாதுகாப்பு விவகார பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல்ல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வளங்கிய பேட்டியில் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். அவையாவன‚
1. பேச்சுவார்த்தையை மீழ ஆரப்பித்தல் மற்றும் முடித்தல் தொடர்பில் குறிப்பிட்ட கால திட்டம் ஒன்று விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட வேண்டும்.
2. சர்வதேச சமூகம் மற்றும் சமாதான செயற்பாட்டிற்கான நிதியுதவி தரும் இனைத் தலைமை நாடுகளுக்கு‚ இராணுவ தளபாடங்கள் எதுவும் கடல் மார்க்கமாக இலங்கைக்குள் கடத்தி வரப்பட மாட்டாது எனும் உத்தரவாதத்தினை விடுதலைப் புலிகள் வளங்க வேண்டும்.
3. சமாதான பேச்வார்த்தைகள் நடைபெரும் காலத்தில் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடுவதில்லை என்ற அர்ப்பனிப்பை செய்ய வேண்டும்.
பேச்வார்த்தைகளுக்கான மேற்படி நிபந்தனைகள் வெவ்வேறு நிலைமைகளில் வெவ்வேறு கேட்போர் கூட்டங்களக்காக கூறப்பட்டவையே அன்றி பேச்சுவார்த்தை மூலமான தீர்வில் உள்ள நம்பிக்கையில் கூறப்பட்டவையாக கொள்ளல் பொருந்தாது. நிபந்தனைகளின் தொணியானது பேச்சுவார்த்தைகளுக்கு வர தூண்டுவதை விட அந்தப் பாதையை விட்டு விலகவே அதிகம் தூண்டுதலாக அமைவது போல் உள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் 2008 ஆண்டு் பங்குனி் மாதம் வெளியிடப்பட்ட ‘சமாதான நம்பிக்கைச் சுட்டி’ ஆய்வின் முடிவுகளின் படி‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 16.6 சதவீதமானவர்கள் மட்டுமே யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஆதரிப்பவர்களாக உள்ளனர்.
தமது இராணுவ முன்னெடுப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ளும் பிரசாரங்களின் படி அரச இராணுவம் வெற்றிப்பாதையில் போய்கொண்டிருக்கிறது. தவிர அவ்வப்போது அரச தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்ற கருத்துகளில் யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்கின்ற செய்தி வலியுறுத்தப்படுவதையும் காணலாம்.
ஆகவே‚ கள நிலைமை எப்படி இருந்தாலும்‚ மக்கள் அபிப்பிராயம்‚ மற்றும் அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்த வெற்றி பிரசாரம் என்பவற்றின் படி பேச்சுவார்த்தை என்பது இப்போதைக்கு விலைபோகாத விடயம். ‘ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும்’ என்ற அரசு முன்வைத்துள்ள நிபந்தனை ஒருபோதும் நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்று என்பது அரசுக்கும் நன்கு தெரியும்.
பொதுவாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை என்கிற பாதையை தெரிவு செய்வது இரு பகுதியும் வெற்றி – வெற்றி (ற ைெ–ற ைெளவைரயவழை)ெ எனும் நிலையில் தீர்வு காண்பதற்கே. இதற்கு இரு தரப்பினரும் விட்டுக்கொடுப்புகளைச் செய்தல் இன்றியமையாதது. பேச்சுவார்தை மூலமான தீர்வின் அடிப்படை விட்டுக்கொடுத்தல் என்பதே. போரில் ஈடுபட்டநிலையில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை விடவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிலையில் முன்வைக்கப்படுகின்ற நிபந்தனைகள் வலுவான‚ நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்கு இயலுகின்ற நிலைக்கு இட்டுச்செல்ல ஏற்ற பின்னனியுடன் கூடியதாகவும் அமையும்.
நேரடியாக ‘ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும்’ என்று இல்லாமல் சற்று தளர்ச்சியான விட்டுக்கொடுப்பு நிலையிலான ஒரு நிபந்தனை தொடர்பில் 2004ல் மக்களின் கொண்டிருந்த அபிப்பிராயங்களை பார்ப்பது இன்றைய கள நிலைமையுடன் ஒப்பிடுகையில் அப்படியே பொருந்தாவிட்டாலும் நிலைமையை விளங்கிக்கொள்ள உதவும்.
இந்த வகையில்‚ 2002ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில்‚ சமாதானம் மற்றம் அரசியல் இனக்கப்பாடு தொடர்பில் ஆற்றுப்படுத்தவும் தீர்மானங்களை எடுக்ககும் முயற்சிகளுக்கும் உறுதுணையாக அமையும் என்ற நோக்கத்தில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் சமாதான செயற்பாடு தொடர்பிலான அறிவு‚ மனோநிலை‚ மற்றும் பழக்கங்கள் பற்றிய அளவீடு (முயுீளு) ஆய்வு ஒன்று நடாத்தப்பட்டு‚ முடிவுகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வில்‚ ‘எல்.ரீ.ரீ.ஈ யினர் தமது கனரக ஆயுதங்களை நடுநிலையான சர்வதேச பிரதிநிதித்துவத்திலான அமைப்பின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருதல் என்ற வேண்டும்’ என்ற நிலைமையையும் ‘வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையங்களை அரசு அகற்தல் வேண்டும்’ என்ற நிலைமையையும் மக்கள் மத்தியில் ஆய்வுக்குற்படுத்தப்பட்டது
இதன் போது ‘எல்.ரீ.ரீ.ஈ யினர் தமது கனரக ஆயுதங்களை நடுநிலையான சர்வதேச பிரதிநிதித்துவத்திலான அமைப்பின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருதல் என்ற வேண்டும்’ என்பதை 85 சதவீதமானவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதே போல்‚ ‘வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையங்களை அரசு அகற்தல் வேண்டும்’ என்பதை 40 சதவீதமானவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால்‚ ‘எல்.ரீ.ரீ.ஈ யினர் தமது கனரக ஆயுதங்களை நடுநிலையான சர்வதேச பிரதிநிதித்துவத்திலான அமைப்பின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமானால் அதற்கு பதில் நடவடிக்கையாக வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையங்களை அரசு அகற்தல் வேண்டும்’ என்ற பொதியை 71 40 சதவீதமானவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இது போலவே மற்றைய எந்த நிபந்தனைகளும் விட்டுக்கொடுத்தல் அடிப்படையில் அமையுமாறு பொதி செய்யப்பட்டால் அன்றி எந்தத் தரப்பினரை நடைமுறைப்படுத்த வைப்பதேர அன்றி மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதேர சாத்தியமானதாக அமையாது.
ஆனால்‚ அரசாகட்டும் விடுதலைப் புலிகளாகட்டும் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயார் இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.
மாரிமுத்து கிருஷ்னமூர்த்தி
20.07.2008