மட்டக்களப்பு என்பது தமிழ் ‚முஸ்லிம் ‚பறங்கியர்‚ கிறஸ்தவர்கள் போன்ற பல்லின சமூகம் வாழும் ஓர் அழகிய மாவட்டமாகும். இப் பிரதேசத்தில் காலத்துக்காலம் இன முரண்பாடு ஏற்படுவது வழமையாகி போய்விட்டது. 1985 காலப்பகுதி வரை தழிழர்களும் முஸ்லிம்களும் மிகவும் அன்னியயொன்னமாக வாழ்ந்ததாக மூதோர்கள் சந்தோஸப்பட்டு சொல்வார்கள். பிற்பட்ட காலப்பகுதியில் தோன்றிய பெரியார்கள் மற்றும் படித்தவர்கள‚் இனவெறியூட்டி சமூகத்தில் இலாபம் காண நினைத்தவர்கள்‚ அரசியல் இலாபம் தேடியவர்கள் அவரவர் சமூகத்தை மற்ற சமூகத்தோடு ஒப்பீட்டு பார்த்து பேச நினைத்தனர் இதன் காரணமாக பல்வேறு வன்செயல்கள் இன முரண்பாடுகளின் நிமித்தம் சொல்லொண்ணர துயரங்களையும் அழிவுகளையும் சந்தித்தனர்.
டுவுவுநு யினர் கிழக்கு மாகணத்தில் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களும் இந்த இன நல்லுறவை பேண தவறிவிட்டனர்.அவர்கள் இருந்த காலப்பகுதியில் முஸ்லிம் ‚தமிழ் மக்கள் மீதும் கப்பம் அறவிட்டனர் . அவர்களிடம் சொந்த வயல்கள் காணிகளில் குடியேறுவதற்கு உரிமை கேட்டவர்களை கொன்றனர். மக்களின் வயல்கள் ஏக்கர் கணக்கில் நெற்பயிர்ச்செய்கைக்கு உட்படாமல் பாலகி கிடந்ததது.அத்துடன் கிழக்கு மாகணத்தில் முன் இருந்த டுவுவுநு யினர் மனிதாபிமானமாக மக்களிடம் நடந்து கொள்ளாததின் காரணமாக அவர்களது போராட்டம் பின்வாங்கல்களுக்கு மிக முக்கிய காரணமாகிவிட்டது.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் மக்கள் நம்பகத்தன்மையை குறைத்தமைக்கான காரணம்
ஏறாவூரில் நடுநிசியில் டுவுவுநு யினர் முஸ்லிம் மக்களை படுக்கையில் தாறுமாறாக வெட்டினர்
முஸ்லிம்களின் மத ஸ்தலமான பள்ளியினுள் புகுந்து அல்லாஹ்வை தொழுது வணங்கி கொண்டிருந்தவர்களை ஈன இரக்கமின்றி சுட்டனர்
கல்முனையைச் சேர்ந்த முஸ்லிம் குழுவினர் ஹஜ் வணக்கம் செய்துவிட்டு தங்களது வீடுகளுக்கு உற்றார் உறவினரை ஆசையோடு பார்க்க கல்முனைக்கு சென்றவர்களை குருக்கல்மடம் பிரதேச பகுதிக்குள் வைத்து காணமல் போனார்கள்.
காட்டில் விறகு சேகரிக்கும் செல்லும் தொழிலாளர்கள் வீடுகளுக்கு பினமாக வந்தனர்
சாமாதான காலத்தில் பொருளாதாரத்தில் பிரசித்தி பெற்ற இடமான வாழைச்சேனை கடைகளை பற்ற வைத்தனர்.
இவ்வாறான கசப்பான உணர்வுகளை சுமந்தவர்களை தற்கால சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றது. அதை போன்று தழிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் மீது நம்பகத்தன்மை குறைத்தமைக்கான காரணம் இன முரண்பாட்டு காலப்பகுதிக்குள் முஸ்லிம் பிரதேசத்துக்குள் வந்த தமிழர்களை காணவில்லை என்பதாகும். மேலுள்ளவாறான குற்றச் சாட்டுகளை இரு சாராரும் மாறி மாறி சாடி வரும் நிலை காணப்படுகின்றது
மேற்படி நிகழ்வுகள் ஏதேர ஓர் வடிவில் இடம் பெறுவது மிகவும் வேதனைக்குறியதாகவே உற்று நோக்க வேண்டியுள்ளது. இம் மாவட்டத்தை பொருத்தவரை தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்பவரகள் ஏனென்றால் புவியியல் ரீதியாகவும் மற்றும் பாரம்பரிய விடயங்களை எடுத்து நோக்கினால் அவர்கள் ஒன்றினைந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
இந்நாட்டின் தற்போதைய மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகணத்தை மீட்டி‚கிழக்கு மாகண சபை தேர்தலை நடாத்தியதின் ஊடாக மக்கள் சிவில் நிறுவாகத்திற்கு பழக்கப்பட்டு வருகின்றனர். எல்லர மக்களும் சந்தோசமாக நிம்மதியாக உறங்குகின்றனர்.அத்துடன் குற்ற செய்தவர்களில் சிலர் நீதி முன் நிறுத்தப்படுகிறார்கள். ஆயுதக்குழுக்கள் அரச கட்டுப்பாட்டுக்குள் இருப்பதும் மற்றும் அவர்கள் தங்களக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நீதி மன்ற முன் நீதி தேடுவது தொடர்கின்ற பட்சத்தில் எதிர்காலத்தில் மிகவும் சிறந்த ஆரோக்கியமான சூழல் ஏற்படும்
அண்மைக்காலமாக சில கசப்பான அசம்பாவிதங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுத்து நோக்கினால் அவைகள் அனைத்தும் கிழக்கு மாகண சபை தேர்தலை அடுத்தே இவை இடம் பெற்றுள்ளது.அதிலும் குறிப்பாக முதலமைச்சர் தெரிவு பாரிய சவாலாக காணப்பட்டதும் அதில் அரசாங்கம் கூடிய ஆசனம் பெறும் சிறுபான்மையினருக்கே முதலமைச்சர் ஆசனம் என்ற கெளரவ ஜனாதிபதியின் கூற்றே வைத்தே பிரச்சினைக்கான அத்திவாரம் போடப்பட்டது என்றால் அது பொய்க்காது எனலாம்.
அதன் பிற்பாடு இடம் பெற்ற வுஆஏீ யினரின் அங்கத்தவரும் முக்கிய நபருமான சாந்தன் என்பவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார.் சுட்டுக்கொல்லப்பட்டது முஸ்லிம் பிரதேசம் என்றபடியினால் அதனை முஸ்லிம் சகோதரர்கள் செய்திருப்பார்கள் என்ற ஓர் தீர்மானத்தை தமிழ் சகோதரர்கள் எடுத்ததின் விளைவாக உத்வேகம் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர்.அதனை கண்உற்ற முஸ்லிம் சகோதரர்களும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.இது எவர் செய்ந்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர்களே. சட்டத்தை தன் கைகளில் எடுத்ததின் விளைவாக ஒன்றுமே அறியாத அப்பாவிகளின் உயிரகள் இரு சாராரிலும் பிரிந்தது மிகவும் கவலைக்குறியதே.இப்படுகொலையை செய்தவர்கள் விளைவை இவ்வளவு அதிகமாக சிந்திக்கவில்லை என்பதனை நடந்த சம்பவங்களை வைத்து எவராக இருந்தாலும் அனுமானித்திருப்பர்.இப் படுகொலைக்கு பின்னால் மக்களின் அன்றாட நிலைமைகள் திரும்புவதற்கு மாதக் கணக்கில் இழுத்தடித்தது. பல்வேறு மட்ட சுற்று பேச்சுகளை புத்தி ஜீவிகள் மற்றும் மத பெரியார்கள் நடத்தினாலும் மக்கள் அதனை நம்ப மறுதலித்தது இம் முறை அவதானிக்க கூடியதாக இருந்தது.எதனையும் அரசியல் கண்ணோட்டத்தோடும் இன துவேசத்தோடும் மக்கள் பார்த்தார்கள் இது மக்கள் விழிப்படைந்துள்ளார்கள் என்பதனை தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.இம் முறை கெளரவ கிழக்கு மாகண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனின் யதார்த்தமான போக்கும்‚ இவ்வின முரண்பாட்டை தீர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் பாரட்டப்பட வேண்டியவையாக காணப்பட்டது.
மற்றும் முஸ்லிம் மக்கள் தற்போதைய வுஆஏீ யினரை பழைய டுவுவுநு யினராவர்கள் எனவே அவர்களை எப்படி நம்புவது என்ற போக்கு இருந்தது .
அத்துடன் பேச்சு வார்த்தைகளுக்கு செல்லும் குழுக்களால் நீதியை நிலைநிறுத்த வேண்டியவரகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் மாத்திரம் விடுக்கலாம் என்று மக்களுக்கு நன்கு தெரிந்திரிந்ததால் பேச்சுவார்த்தை குழுக்களில் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்திருந்தது.
அடுத்ததாக கடந்த மாதம் மீராவோடை பிரதேசத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பதுரியர பிரதேசத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் குடிசைகளையும் வேலிகளையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.இதில் 15 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.இப் பிரதேசமும் தமிழ் ‚ முஸ்லிம் மக்கள் வாழுகின்ற எல்லைக் கிராமமாகும். இதுவும் அடுத்த ஓர் இனப்பிரச்சினைக்கான ஓர் சூழ்ச்சியாகவும் இருக்கலாம்
இன ஜக்கியம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகினால் அதனை குழப்புகின்றவர்கள் இலகுவாக குழப்பிவிடுகின்றனர் .
மேற்படி விடயங்களை பார்க்கும் போது மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டிய தேவை ஒன்று காணப்படுகின்றது .மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்பினால் மற்றும் போதாது அவர்களின் மத்தியில் இன நல்லுறவு பாலத்துக்கு மிக முக்கிய உறுதுனையாக காணப்படும் தொடர்பாடல் இடைவெளியை குறைத்து பரஸ்பர புரிந்துணர்வுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மத்தியஸ்த்தரத்தின் முன்னிலையில் ஏற்படும் போதுதான் இன ஜக்கிய நல்லுறவு ஏற்படுத்தப்படும்
ஆகவே தான் இன ஜக்கிய நல்லுறவு ஏற்படுத்தப்படல் வேண்டும்
(இன ஜக்கியத்தை குழப்பி இன வெறி ஊட்டுகின்ற எந்த ஓர் அமைப்பேர ‚அரசியலோ‚ இயக்கங்களேர அல்லது தனிநபரேர மக்களின் மனதில் இருந்து மிகவம் குறுகிய காலப்பகுதிக்குள் அகன்றார்கள் என்பது வரலாறாக இருக்கின்றது .)